Thursday, December 31, 2009

விடைகொடுப்போம் 2009, வரவேற்போம் 2010

2009-ம் ஆண்டு என்னை பொறுத்த வரை எனக்கு மிக மோசமாகவே தொடங்கியது. காரணம் சத்யம் - இந்திய பங்குச்சந்தையை திருப்பி போட்ட, எளிதில் யாரும் மறக்கமுடியாத எட்டாயிரம் கோடி ஊழல் விவகாரம். ஊழல் வெளியான நாளன்று (ஜனவரி 7ம் தேதி) நாங்கள் அலுவலகத்தில் இருந்த போது எங்களுக்கு அதன் தாக்கம் தெரியவில்லை அல்லது புரியவில்லை. நானும் நண்பர்களும் ஏதோ ஊழல் விவகாரம் போல என்று வழக்கம் போல பேசி விட்டு கலைந்து விட்டோம். மாலை வீடு வந்து சேர்ந்து தொலைக்காட்சியை பார்த்த பிறகு தான் அதன் வீரியம் புரிந்தது. எந்த செய்தி சேனலை திருப்பினாலும் நான்கு பேர் அமர்ந்து கொண்டு இந்த ஊழல் விவகாரத்தையே பேசிக்கொண்டு இருந்தார்கள்.

சும்மாவே எனக்கெல்லாம் தூக்கம் வராது, இந்த ஊழல் செய்தியை கேட்டு & பார்த்த பிறகு தூக்கமேயில்லை. மறுநாள் வேளைக்கு சென்றால் நமக்கு அங்கு வேலை இருக்கும்மா, நம்மை உள்ளே விடுவார்களா என்று சந்தேகம் வேறு.

அதை விட கொடுமை அன்று இரவு, இரண்டு மூன்று வருடம் என்னிடம் தொடர்பில்லாத நண்பர்கள் எல்லாம் கைபேசியில் துக்கம் விசாரித்தது தான். அலுவகத்தில் என்ன பேசி கொள்கிறார்கள் அல்லது சொன்னார்கள், உனக்கு சம்பளம் வருமா என்று ஏகப்பட்ட கேள்வி வேறு. அதுவும் சொல்லிவைத்தது போல அனைவரும் ஒரே கேள்வியை கேட்க எனக்கு தலையே வெடித்துவிடும் போல இருந்தது. அன்றைய இரவு அப்படியாக கழிந்தது.

அப்படி தொடங்கிய இந்த வருடம் ஆண்டிறுதியில் ஆசுவாசம் வழங்கியிருக்கிறது (என்னடா ஜனவரியில் தொடங்கியவன் திடிரென்று டிசம்பருக்கு வந்துவிட்டான் என்று நினைக்காதிர்கள், என்னை பாதித்த சம்பவத்தை மட்டுமே இங்கே பகிர்ந்து இருக்கிறேன். மற்றவை அடுத்த வருடத்தில்).

விடைகொடுப்போம் 2009 க்கு, வரவேற்போம் 2010 யை.

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Monday, December 28, 2009

வேட்டைக்காரன் - எனது பார்வையில்

நேற்று தான் விஜயின் வேட்டைக்காரன் பார்க்க (திரையரங்கில் அல்ல) சந்தர்ப்பம் கிடைத்தது (எப்ப தாண்ட பிரபல பதிவர்கள் பேச்சை கேட்க போற). நானும் 'வேட்டைக்காரன் - எனது பார்வையில்' என்று எதாவது கிறுக்கலாம் என்று நினைத்திருந்தேன். ஊரே எழுதி தள்ளிய பிறகு, நான் என்னத்த கிறுக்கறது.

அதனால கீழ உள்ள கானோளியை பாத்துட்டு போய் புள்ள குட்டிய படிக்க வைங்க, ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்...



குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Sunday, December 27, 2009

Jog Falls பயணக்கட்டுரை - 1

வருட இறுதியில் அலுவலகத்தில் வேலை கம்மியாக (யாருப்பா அது - வேலை அதிகமாக இருந்தா மட்டும் நீ என்ன பண்ண போறனு கேட்கறது) இருக்கும். அதனால் எங்காவது சுற்றுப்பயணம் செல்லலாம் என்று முடிவு செய்து என் அலுவலக நண்பர்களிடம் கேட்டேன். அவர்களும் போகலாம் என்று சாடை கூறியதால், எங்கு செல்லலாம் என்று கூகிள் ஆண்டவரை தேடினோம். வழக்கம் போல் அது பல இடங்களை காட்டியது. முதலில் கொடைக்கானல், செல்லலாம் என்று முடிவு செய்த போது யாரும் ஆர்வம் காட்டவில்லை. பின்பு கடவுளின் தேசமான கேரளா செல்லலாம் என்று முடிவு செய்தபோதும் சேம் பிளட்தான்.

சரி வடமாநிலங்கள் பக்கம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிய போது கிடைத்த இடம் தான் - இந்தியாவின் மிக உயரமான (எந்த பாறையின் மீதும் மோதாமல் நேராக தரையில் விழம்) ஜோக் (Jog) நீர்வீழ்ச்சி சிக்கியது. மற்றவர்களுக்கும் இந்த இடம் பிடித்து போக, அதன்படி வேட்டைக்காரன் (சரி விடுங்கப்பா, அவதார்) ரிலீஸ்க்கு முந்தின நான் கிளம்பி 18, 19 மற்றும் 20ம் தேதி பார்த்துவிட்டு வரலாம் என்று முடிவு செய்யப்பட்டது.



ஒரு நீர்வீழ்ச்சியை காண 800 கிலோமீட்டர் செல்ல வேண்டுமா என்று தயக்கம் வேறு. அதனால் Teambhp-யை தேட ஆரம்பித்தேன். வழக்கம் போல் அது ஜோக் (Jog) சுற்றி உள்ள பல இடங்களை கொட்டியது. ஆனால் எங்களுக்கு இருந்ததோ மூன்று நாட்கள் மட்டுமே.

அதனால் 18ம் தேதி ஒகேனக்கல் சென்று பார்த்துவிட்டு, பின்பு அங்கிருந்து மதியம் கிளம்பி பெங்களூரு சென்று - இரவு தங்கி விடுவதாக திட்டம். ஆனால் நாட்கள் நெருங்க நெருங்க நாங்கள் போட்ட திட்டம் மாறிக்கொண்டே (ஒகேனக்கல் இப்பொழுது எங்கள் பிளானில் இல்லை) மற்றும் நண்பர்கள் (அலுவலகத்தில் என்னுடன் சேர்த்து நான்கு, பெங்களுரூறில் இருந்து மூன்று) எண்ணிக்கை குறைந்து கொண்டே இருந்தது. பெங்களுரூ நண்பர்கள் நிறைய ஆனி புடுங்க இருந்த காரணத்தால், விடுப்பு எடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.



சரி சென்னையிலிருந்து நான்கு பேர் கிளம்புகிறோம் என்று பார்த்தால் அங்கேயும் ஒரு திருப்பம் (வளைவு இல்லப்பா ட்விஸ்ட்). நால்வரில் ஒருவர் சொந்த காரணங்களுக்காக வர இயலாது என்று கூறியதால் – அப்ப ஊட்டிக்கு ச்சீ ஜோக் -கு தனியாகதான் செல்ல வேண்டும் போல என்று நினைத்திருந்தேன். ஆனால் கடைசி நேரத்தில் சக ஊழியர் ஒருவர் சரி என்று கூறியதால் நாங்கள் திட்டமிட்டப்படி கிளம்ப தயாரானோம்.

17-ம் தேதி மாலை 5 மணிக்கு கிளம்புவதாக திட்டம், கிளம்பி இரவு பெங்களூருரீல் தங்கிவிட்டு மறுநாள் விடியற்காலை கிளம்பி ஷிமோகா போய் ரூம் எடுத்து கொஞ்சம் களைப்பாறிவிட்டு, அருகில் உள்ள இடங்களை பார்க்கலாம் என்று முடிவு செய்து இருந்தோம். நினைப்பதெல்லாம் எங்கே நடக்கிறது, நாம் ஒன்று நினைக்க கடவுள் மற்றொன்றை நினைக்கிறார் போலும்.

ஐந்து ஆறாகியது, ஆறு எட்டாகியது. அனைவரும் ஒன்று கூடி நாங்கள் புறப்பட்ட பொழுது நேரம் சரியாக ஒன்பது மணி, பூந்தமல்லி தாண்டி தேசிய நெடுஞ்சாலையை தொட்ட பொழுது இரவு 10.௦0 மணி ஆகிவிட்டது. சும்மா சொல்லக் சொல்லக்கூடாது சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலை சும்மா பளபளனு இருக்குப்பா. நாங்கள் அலுவலக கதைகளை பேசிக்கொண்டே சென்றதால் நேரம் போனதே தெரியவில்லை. யாருக்கும் மது அருந்தும் பழக்கம் இல்லாததால் எல்லா பச்சை போர்டு கடைகளும் எங்களை பார்த்து சிறிது கொண்டு (தண்ணி அடிக்காம என்னங்கடா உங்க சுற்றுப்பயணம் – யாரோ கேட்பது புரிகிறது) இருப்பது போல் ஒரு பிரம்மை.

சுமார் ஒரு மணியளவில் ஒசூர் தாண்டி விட்டோம். அப்பொழுது...

அது அடுத்த பதிவில்...

டிஸ்கி: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Saturday, December 26, 2009

அவதார் – விமர்சனம்



தேவி திரையரங்கம் புதுப்பித்த பிறகு நான் சென்று பார்த்த படம் ‘அவதார்’. இதற்கு முன் Inglourious Basterds பார்க்கலாம் என்று முடிவு செய்து ஏதோதோ காரணங்களால் கடைசியில் சத்யம் சினிமாஸில் பார்த்து விட்டு வந்தோம். புதுப்பித்த பின் தேவி நல்லாதான் இருக்கிறது (ஐ மீன் தேவி தியேட்டர்).



சரி நாம் கதைக்கு வருவோம். பண்டோரா என்னும் காட்டில் (வேற்று கிரகம்??) உள்ள கனிம வளங்களை கைப்பற்றுவதற்காக, அங்குள்ள ஒரு விதமான மனிதர்களை செயல்பாடுகளை அறிந்து கொள்ள, இங்கிருந்து ஜாக் என்பவனை அவதாராக தயார் செய்து அணுப்புகிறார்கள். அங்கு செல்லும் ஜாக் அவர்களுடன் பழகி, வழக்கம் போல் அந்நாட்டு இளவரசியை காதல் கொண்டு அவர்களில் ஒருவனாகவே மாறிப் போகிறார். அதே வேளை ஜாக்கை அனுப்பிய மனிதர்கள் (வில்லன்கள்) அக்கிரகத்தை அடைய ரோபோக்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் இன்ன பிற சமாசாரங்கள் கொண்டு அழிக்க வருகிறார்கள். அவர்கள் நினைத்தது நடந்ததா என்பது மீதி கதை.



கதை என்று பார்த்தால் நமக்கு பழக்கப்பட்ட ஒன்று தான், ஆனால் அவர்கள் இம்முறை மிரட்டியிருப்பது டெக்னிகலாக. 2டியில் பார்த்தப்பொழுது பிரமாண்டமாக இருந்ததே தவிர பிரம்மிப்பாக இல்லை. ஒரு வேலை 3டியில் பார்த்திருந்தால் பிராமிப்பாக இருந்திருக்கோமோ என்னோவோ??

படத்தில் foreground-ல் உழைத்தவர்களை விட background-ல் உழைத்தவர்களின் பங்கு சிறப்பானது. எது கிராஃப்பிக்ஸ் எது உண்மை என்று இந்த படத்திற்கு ஒரு போட்டியே வைக்கலாம்.

இப்படத்தை பற்றி மேலும் அறிய (டெக்னிகலாக) அக்கரையை கிளிக்குங்கள்.

டிஸ்கி: இது என்னுடைய முதல் விமர்சனம். பிழைகள் இருந்தால் கண்டிப்பாக சொல்லவும்.

Wednesday, December 16, 2009

முதல் இரண்டாவது பதிவு

அப்பாடா..ஒரு வேலை முடிந்தது என்று நினைக்கிறேன்...
நானும் கடந்த ஆறுமாத காலமாக ஒரு வலைப்பதிவு தொடங்க வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தேன். ஆனால் அதை எப்படி தொடங்குவது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு வேளை தொடங்கிவிட்டால் என்ன எழுதுவது என்று குழப்பம் வேறு. அதனால் அதுவரை மற்ற (யூத்) பதிவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்று கவனித்து கொண்டு இருந்தேன். அண்ணன் கார்க்கி பதிவுல நமக்கு கொஞ்சம் ஐடியா கிடைச்சது, அதாவது என்ன எழுதலாம்னு...அவ்வ்வ்வ்...
எப்படியும் வேட்டைக்காரன் படம் (ஏன் என்று கேட்க கூடாது) வருவதற்குள் (வராது என்று நினைத்திருந்தேன்) ஒரு வலைப்பதிவு ஆரம்பித்து விடவேண்டும் என்று நினைத்திருந்தேன்.
அப்படி எப்படி என்று இறுதியாக எனக்கென்று ஒரு வலைப்பதிவும் தொடங்கியாச்சு. முதல் பதிவு வேட்டைக்காரன் படம் விமர்சனம் ஆக இருந்தால் நல்ல இருக்கும் என்று   நினைத்திருந்தேன். ஆனால் முடியவில்லை. அந்த வாரம் ஒரு சுற்றுபயணம் செல்ல திட்டம் இருந்ததால் (கேட்டாலும் கேட்காவிட்டாலும் தனி பதிவாக வரும்), முதல் பதிவாக இந்த வலைப்பதிவு தொடங்கிய கதையை பதிகிறேன் (என்னமோடா மாதவா...நீயும் ஒரு பதிவு எழுத்திட்ட). 
இன்னும் எழுதவே ஆரம்பிக்கல அதுக்குள்ள நாக்க தள்ளுதூ...
கிறுக்கியது 16/Dec/2009, பதிவேற்றும் செய்தது 22/Dec/2009

என்னுடைய முதல் பதிவு

என்னுடைய முதல் பதிவு