
ட்ரைலரில் சொதப்பியவர்கள் எங்கே படத்தையும் சொதப்பியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், நல்ல வேளை தெலுங்கு ஆர்யாவை அப்படியே எடுத்துத்திருக்கிறார்கள் (கொஞ்சம் லேட்டாக, நம்ம ரீமேக் ராஜாவாக இருந்தால் (அதாங்க ஜெயம் ரவியின் அண்ணன்) அப்பொழுதே ரீமேக்கிருப்பார்).
ஸ்ரேயா ஒரு கல்லூரி மாணவி. சமீர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு அரசியல்வாதியின் மகன். ஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி (தற்கொலை செய்து கொள்வதாக) காதலிக்க வைக்கிறார். அப்பொழுதுதான் நம் ஹீரோ என்ட்ரியாகிறார். அவரும் ஸ்ரேயாவை காதலிப்பதாக சொல்ல அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை. ஸ்ரேயா தனுஷ் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் தனுஷ் விடாமல் அவரையே காதலிக்கிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே மீதி கதை (ஹீரோவை தவிர வேறு யார்!!!!).
இந்த படத்தை தெலுங்கு ஆர்யா வந்தவுடனே ரீமேக் ஆக்கி இருக்கவேண்டும். ஏன்றென்றால் பல காட்சிகள் மிக சரியாக யுகிக்கமுடிகிறது, இல்லையென்றால் எங்கோ பார்த்த (தமிழ் படத்தில் தான்) மாதிரியே இருக்கிறது. ஆனால் அதையும் மீறி இந்த படத்தை பார்க்க முடிகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் தனுஷ். இந்த மாதிரி கேரக்டர்களுக்கு தனுஷ் ரொம்ப எளிமையாக செட் ஆகிவிடுகிறார். இந்த படத்தில் அவர் செய்யும் சேட்டைகளும் (காதலக்காக) நம்மை ரசிக்க வைக்கின்றன.
ஸ்ரேயாவை சுற்றியே கதை என்பதால் அவரும் ஒரு அளவு நடித்திருக்கிறார்.
முதல் பாதி முழுவதும் ஒளிப்பதிவுக்கு (பாலசுப்ரமணியம்) அந்த அளவுக்கு வேலையில்லை. ஆனால் பிற்பாதியில் மனிதர் கலக்கி இருக்கிறார். இசை DSP. ஆர்யாவில் போட்டதையே இங்கேயும் போட்டு இருக்கிறார்.
மற்றபடி தனுஷ்க்காக குட்டியை கண்டிப்பாக பார்க்கலாம்.
#####################################################################
ஏற்கனவே ஆயிரம் பேர் எழுதி தள்ளிய இந்த படத்தை நானும் ஆயிரத்தில் ஒருவனாக எழுதிக் கொள்கிறேன்.

ட்ரைலரில் மிரட்டியவர்கள் இங்கே இரண்டாம் பாதி (சில காட்சிகள் ஏன் வருகிறது என்று புரியவே இல்லை) படத்தை சொதப்பியிருக்கிறார்கள். இங்கே நான் கதையை கூற போவதில்லை. ஏற்கனவே மற்ற பதிவர்கள் நிறைய எழுதி விட்டதால், எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிவர் மூவர் - ரீமா சென் (அந்த அதிரடியான முற்பாதி பிற்பாதி கேரக்டர்க்கு), இசையமைப்பாளர் GV பிரகாஷ் (பாடல்கள் ஏற்கனவே ஹிட், அதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, பின்னணி இசையும் ஓகே, எது தேவையோ அதை தந்து இருக்கிறார்) மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி (முதல் பாதிக்கு மட்டும், இரண்டாம் பாதி கண்கள் கட்டுகிறது).
மற்றபடி கார்த்திக்கு முதல் பாதி (கொஞ்சம் நடிப்பதற்கு) மட்டுமே வேலை, அதுவும் எல்லாரிடமும் அடி வாங்குகிறார். ஆண்ட்ரியாவுக்கு அந்த வேலை கூட இல்லை. நடக்கிறார், இரண்டு பாடலுக்கு நடனம் ஆடுகிறார், அவ்வளவுதான். பிற்பாதியில் அதுவும் கிடையாது.
செல்வராகவன் தெரிவதெல்லாம் Adult's Only காட்சிக்களில் மட்டுமே. பேப்பரில் எழுதியதெல்லாம் ஸ்க்ரீனில் வந்ததா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.
மற்றபடி அசத்தலான முதல் பாதி, சொதப்பலான இரண்டாம் பாதி.
குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.