Wednesday, April 28, 2010

சுறா - திருந்தாத விஜய் (நன்றி: கார்க்கி)

இருந்தாலும் இந்த காசி தியேட்டர்க்காரர்களுக்கு இந்த குசும்பு இருக்க கூடாது. படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஸ்லைடு போட்டார்கள் பாருங்கள், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் இப்படி இருந்தது 'இந்த திரைப்படம் சாட்டிலைட் மூலம் திரையிடுவதால் ஒன்ஸ்மோர் போட இயலாது'. சிரிப்பு வருமா வராதா.


சரி நாம் சுறா வுக்கு வருவோம். விஜய்-யின் ஐம்பதாவது படம். அது ஒன்று மட்டுமே இப்படத்தை முதல் நாள் பார்க்க தூண்டியது. சரி இந்த படத்திலாவது ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என்று போனால், ஐம்பது படம் அல்ல நூறு படம் நடித்தாலும் பெரிய வித்தியாசம் இருக்க போவதில்லை (நடிப்பில் மற்றும் திரைக்கதையில்).

சமீபத்தில் வந்த படங்களில் அனைத்து காட்சிகளும் யூகிக்க முடிந்த படம் என்றால் அது சுறா வாக தான் இருக்கும் (அவர் அறிமுக காட்சி தவிர). எப்படி தான் இப்படி உக்காந்து யோசிப்பாங்களோ...தெரியல....

விஜய் வழக்கம் போல நம்மை பார்த்து வசனம் பேசுகிறார் (சம்மந்தம் இல்லாமல்), காமெடி பண்ணுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். கடலுக்கு எப்படி எல்லை இல்லையோ, அதுபோல் வருவோர் போவோர் எல்லாம் எல்லையில்லாமல் விஜய் புராணம் பாடுகிறார்கள். நமக்குதான் காதில் ரத்தம் வருகிறது.

தமன்னா ஒரு லூசு பெண் போலவே வருகிறார் (அட அந்த கேரக்டர் சொன்னேன்). இரண்டாவது முறை விஜயை பார்க்கும் பொழுது காதல் கொள்கிறார். அதன் பின் அவர் எப்பொழுதெல்லாம் வருகிறாரோ அப்பொழுதெல்லாம் பின்னாடியே ஒரு பாடலும் வருகிறது. ஆனால் ரசிகர்கள் தான் வெளியே போய் விடுகிறார்கள், தம் அடிக்க.

வில்லன் தேவ்கில். இவ்வளவு காமெடியான டப்பிங் வில்லனை பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது. படம் முழுதும் விஜயை அழிக்க திட்டம் போட்டு கொண்டே இருக்கிறார். நமக்கு தான் முன்னாடியே தெரிந்து விடுகிறது. நமக்கே தெரியும் பொழுது, ஹீரோவுக்கு தெரியாத என்ன.

வடிவேலு - சில இடங்களில் சிரிப்பு, பல இடங்களில் எரிச்சல்.

விஜய் படத்தில் பாடல்கள் எல்லாம் படம் வருவதற்கு முன் ஹிட்டாகும். ஆனால் இம்முறை படம் வந்தும் கேட்க முடியவில்லை, இரண்டு பாடல்கள் (தஞ்சாவூர் ஜில்லாகாரி மற்றும் நான் நடந்தால் அதிரடி) தவிர மற்ற பாடல்கள் எல்லாம் படத்தை நேரம் கடத்த தான் உதவுகிறது. அந்த இரு பாடல்களுக்கும் ராபர்ட் தான் நடனம் அமைத்திருக்கிறார். அட்டகாசம். தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடலுக்கு பின் வரும் சண்டைகாட்சி படமாக்கிய விதம் மற்றும் எடிட் பண்ண விதம் , அருமை. அதை போல படம் முழுதும் வெட்டி தள்ளியிருக்கலாம்.

டைரக்டர் ராஜகுமார் பத்தியெல்லாம் சொல்ல விரும்பலப்பா.

மொத்தத்தில் சுறா - வழக்கம் போல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Wednesday, April 14, 2010

ஐ.பி.எல், கேப்டன் மற்றும் பையா

ஐ.பி.எல்:


கடந்த இரண்டு வருடத்தில் இல்லாத சிறப்பு இந்த ஐ.பி.எல் லுக்கு இருக்கிறது. இறுதியாட்டத்துக்கு ஒரு வார காலமே இருக்கும் நிலையில் இதுவரை ஒரு அணியை தவிர மற்றவை எல்லாம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. எனக்கென்னவோ சூதாடிகளிடம் இந்த போட்டிகள் சிக்கி விட்டனோவோ என்று தோன்றுகிறது. நமக்கு எதுக்கு அந்த அரசியல் எல்லாம்.

இதுவரை நடந்து போட்டிகளை வைத்து பார்க்கும் பொழுது மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி அணிகள் அரையிருதிக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் அதிகம் போராடினால் தான் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும். மிதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அவர்களுக்கு அரையிருதி வாய்ப்பு கிட்டும்.

பொறுத்தது பொறுத்தோம் இன்னும் ஒரு வார காலம் பொறுக்க மாட்டோமோ...பார்ப்போம் இம்முறை இந்திய கேப்டன் வெல்கிறாரா அல்லது வெளிநாட்டு கேப்டன் வெல்கிறாரா..

கேப்டன் டிவி:


கேப்டனும் தொடங்கி விட்டார் தனக்கென்று ஒரு டிவியை. நாமெல்லாம் அவர் நடித்த (என்னது கேப்டன் நடித்தாரா என்று கேட்க கூடாது) படங்களை பார்த்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டார். கெரகம் வந்துவிட்டார். தேர்தலில் அவர் கட்சி ஆட்களை கவுத்துவிட்டிர்கள். அவரும் எத்தனை நாட்களுக்கு தான் பொறுத்திருப்பார், அதான் பொங்கிவிட்டார் டிவி வடிவில். இனி தினமும் கேப்டன் படம் தாண்டி. பொழுதுபோக்குக்கு கியாரன்டீ (கேப்டன் படங்களை சொன்னேன்).

எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை, வீட்டில் டிஷ் டிவி இருப்பதால் கேப்டன் டிவி வரவில்லை.

பையா:
லிங்குசாமி படத்தில் எதுவும் புதுசாக எதிர்பார்க்க முடியாது - எதிர்பார்க்கவும் கூடாது. அதையும் மீறி இந்த படத்தை பார்க்க தூண்டியது யுவனின் இசை மட்டுமே.

கார்த்திக்கு நடிக்க பெரியளவு வாய்ப்பில்லை, சும்மா தான் வருகிறார். தமன்னாவை பார்த்து கொண்டே இருக்கலாம் போல. இதில் வில்லன் வேறு. மிலிந்த் சோமன் காமெடிக்கு நன்றாக உதவியிருக்கிறார். படத்தை தாங்கி பிடிப்பது இசை மற்றும் எடிட்டிங் மட்டுமே. பல இடங்களை வெட்டியும் கொட்டாவி வருவதை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் சாலைகளில் இருந்த திருப்பம் கூட இந்த படத்தில் இல்லை.

அங்காடித் தெரு:
படத்தை பற்றி பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். புதுமுகம் மகேஷ், அஞ்சலி, 'ப்ளாக்' பாண்டி, இயக்குனர் வெங்கடேஷ் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தியிருக்கிறார்கள். ஜெயமோகனின் வசனங்கள் ரொம்பவே பளிச், ரசிக்க முடிகிறது. படம் சற்று நீளம். எடிட்டர் கொஞ்சம் தூங்கிவிட்டார் போல.

யதார்த்தமான படம் கொஞ்சம் மிகைப்படுத்தி எடுத்தியிருக்கிறார்கள் (ஆனால், ரசனையுடன்), கிளைமாக்ஸ் உட்பட.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.