Wednesday, April 28, 2010

சுறா - திருந்தாத விஜய் (நன்றி: கார்க்கி)

இருந்தாலும் இந்த காசி தியேட்டர்க்காரர்களுக்கு இந்த குசும்பு இருக்க கூடாது. படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஸ்லைடு போட்டார்கள் பாருங்கள், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் இப்படி இருந்தது 'இந்த திரைப்படம் சாட்டிலைட் மூலம் திரையிடுவதால் ஒன்ஸ்மோர் போட இயலாது'. சிரிப்பு வருமா வராதா.


சரி நாம் சுறா வுக்கு வருவோம். விஜய்-யின் ஐம்பதாவது படம். அது ஒன்று மட்டுமே இப்படத்தை முதல் நாள் பார்க்க தூண்டியது. சரி இந்த படத்திலாவது ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என்று போனால், ஐம்பது படம் அல்ல நூறு படம் நடித்தாலும் பெரிய வித்தியாசம் இருக்க போவதில்லை (நடிப்பில் மற்றும் திரைக்கதையில்).

சமீபத்தில் வந்த படங்களில் அனைத்து காட்சிகளும் யூகிக்க முடிந்த படம் என்றால் அது சுறா வாக தான் இருக்கும் (அவர் அறிமுக காட்சி தவிர). எப்படி தான் இப்படி உக்காந்து யோசிப்பாங்களோ...தெரியல....

விஜய் வழக்கம் போல நம்மை பார்த்து வசனம் பேசுகிறார் (சம்மந்தம் இல்லாமல்), காமெடி பண்ணுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். கடலுக்கு எப்படி எல்லை இல்லையோ, அதுபோல் வருவோர் போவோர் எல்லாம் எல்லையில்லாமல் விஜய் புராணம் பாடுகிறார்கள். நமக்குதான் காதில் ரத்தம் வருகிறது.

தமன்னா ஒரு லூசு பெண் போலவே வருகிறார் (அட அந்த கேரக்டர் சொன்னேன்). இரண்டாவது முறை விஜயை பார்க்கும் பொழுது காதல் கொள்கிறார். அதன் பின் அவர் எப்பொழுதெல்லாம் வருகிறாரோ அப்பொழுதெல்லாம் பின்னாடியே ஒரு பாடலும் வருகிறது. ஆனால் ரசிகர்கள் தான் வெளியே போய் விடுகிறார்கள், தம் அடிக்க.

வில்லன் தேவ்கில். இவ்வளவு காமெடியான டப்பிங் வில்லனை பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது. படம் முழுதும் விஜயை அழிக்க திட்டம் போட்டு கொண்டே இருக்கிறார். நமக்கு தான் முன்னாடியே தெரிந்து விடுகிறது. நமக்கே தெரியும் பொழுது, ஹீரோவுக்கு தெரியாத என்ன.

வடிவேலு - சில இடங்களில் சிரிப்பு, பல இடங்களில் எரிச்சல்.

விஜய் படத்தில் பாடல்கள் எல்லாம் படம் வருவதற்கு முன் ஹிட்டாகும். ஆனால் இம்முறை படம் வந்தும் கேட்க முடியவில்லை, இரண்டு பாடல்கள் (தஞ்சாவூர் ஜில்லாகாரி மற்றும் நான் நடந்தால் அதிரடி) தவிர மற்ற பாடல்கள் எல்லாம் படத்தை நேரம் கடத்த தான் உதவுகிறது. அந்த இரு பாடல்களுக்கும் ராபர்ட் தான் நடனம் அமைத்திருக்கிறார். அட்டகாசம். தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடலுக்கு பின் வரும் சண்டைகாட்சி படமாக்கிய விதம் மற்றும் எடிட் பண்ண விதம் , அருமை. அதை போல படம் முழுதும் வெட்டி தள்ளியிருக்கலாம்.

டைரக்டர் ராஜகுமார் பத்தியெல்லாம் சொல்ல விரும்பலப்பா.

மொத்தத்தில் சுறா - வழக்கம் போல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Wednesday, April 14, 2010

ஐ.பி.எல், கேப்டன் மற்றும் பையா

ஐ.பி.எல்:


கடந்த இரண்டு வருடத்தில் இல்லாத சிறப்பு இந்த ஐ.பி.எல் லுக்கு இருக்கிறது. இறுதியாட்டத்துக்கு ஒரு வார காலமே இருக்கும் நிலையில் இதுவரை ஒரு அணியை தவிர மற்றவை எல்லாம் இன்னும் அடுத்த கட்டத்துக்கு செல்லவில்லை. எனக்கென்னவோ சூதாடிகளிடம் இந்த போட்டிகள் சிக்கி விட்டனோவோ என்று தோன்றுகிறது. நமக்கு எதுக்கு அந்த அரசியல் எல்லாம்.

இதுவரை நடந்து போட்டிகளை வைத்து பார்க்கும் பொழுது மும்பை, சென்னை, பெங்களூர், டெல்லி அணிகள் அரையிருதிக்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம். ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் அதிகம் போராடினால் தான் அடுத்த கட்டத்துக்கு செல்லமுடியும். மிதமுள்ள இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால்தான் அவர்களுக்கு அரையிருதி வாய்ப்பு கிட்டும்.

பொறுத்தது பொறுத்தோம் இன்னும் ஒரு வார காலம் பொறுக்க மாட்டோமோ...பார்ப்போம் இம்முறை இந்திய கேப்டன் வெல்கிறாரா அல்லது வெளிநாட்டு கேப்டன் வெல்கிறாரா..

கேப்டன் டிவி:


கேப்டனும் தொடங்கி விட்டார் தனக்கென்று ஒரு டிவியை. நாமெல்லாம் அவர் நடித்த (என்னது கேப்டன் நடித்தாரா என்று கேட்க கூடாது) படங்களை பார்த்திருந்தால் அவர் அரசியலுக்கு வந்து இருக்க மாட்டார். கெரகம் வந்துவிட்டார். தேர்தலில் அவர் கட்சி ஆட்களை கவுத்துவிட்டிர்கள். அவரும் எத்தனை நாட்களுக்கு தான் பொறுத்திருப்பார், அதான் பொங்கிவிட்டார் டிவி வடிவில். இனி தினமும் கேப்டன் படம் தாண்டி. பொழுதுபோக்குக்கு கியாரன்டீ (கேப்டன் படங்களை சொன்னேன்).

எனக்கு தான் கொடுத்து வைக்கவில்லை, வீட்டில் டிஷ் டிவி இருப்பதால் கேப்டன் டிவி வரவில்லை.

பையா:
லிங்குசாமி படத்தில் எதுவும் புதுசாக எதிர்பார்க்க முடியாது - எதிர்பார்க்கவும் கூடாது. அதையும் மீறி இந்த படத்தை பார்க்க தூண்டியது யுவனின் இசை மட்டுமே.

கார்த்திக்கு நடிக்க பெரியளவு வாய்ப்பில்லை, சும்மா தான் வருகிறார். தமன்னாவை பார்த்து கொண்டே இருக்கலாம் போல. இதில் வில்லன் வேறு. மிலிந்த் சோமன் காமெடிக்கு நன்றாக உதவியிருக்கிறார். படத்தை தாங்கி பிடிப்பது இசை மற்றும் எடிட்டிங் மட்டுமே. பல இடங்களை வெட்டியும் கொட்டாவி வருவதை தடுக்க முடியவில்லை. மொத்தத்தில் படத்தில் காட்டப்படும் சாலைகளில் இருந்த திருப்பம் கூட இந்த படத்தில் இல்லை.

அங்காடித் தெரு:
படத்தை பற்றி பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். புதுமுகம் மகேஷ், அஞ்சலி, 'ப்ளாக்' பாண்டி, இயக்குனர் வெங்கடேஷ் அனைவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்தியிருக்கிறார்கள். ஜெயமோகனின் வசனங்கள் ரொம்பவே பளிச், ரசிக்க முடிகிறது. படம் சற்று நீளம். எடிட்டர் கொஞ்சம் தூங்கிவிட்டார் போல.

யதார்த்தமான படம் கொஞ்சம் மிகைப்படுத்தி எடுத்தியிருக்கிறார்கள் (ஆனால், ரசனையுடன்), கிளைமாக்ஸ் உட்பட.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Tuesday, March 2, 2010

சாருவின் சிபாரிசும் நித்தியானந்த சுவாமிகளும்

என்னடா பொழுது சாஞ்சிருச்சே எதுவும் நடக்கலையே பார்த்தா...சன் செய்திகளில் என்னடா பிட்டு படம் போடுறாங்க பார்த்தா அட நம்ம நித்தியானந்த சுவாமிகள் படத்தில் ஒரு நடிகையுடன் (டிவியில் தான் சொன்னாங்க) விளையாடி கொண்டு இருக்கிறார். அடடா அந்த நடிகை முத்தம் கொடுப்பதும் இவர் அதை ரசிப்பதும் கண்கொள்ள காட்சி.

ஏற்கனவே 8.30 மணிக்கு ஒரு ஷோ முடிஞ்சு போச்சு...நான் ஒன்பது மணியாட்டம் பாத்தேன்...அடுத்த 9.30 மணிக்கு ஒரு ஷோ..
இதில் சாரு மூன்றில் ஒரு பதிவு இவருக்கு கூஜா தூக்குகிறார்...கலிகாலம்டா....நாளை இதற்கு ஒரு மறுப்பு பதிவு வேறு போடுவார்....கூடவே வங்கி கணக்கையும் சேர்த்து....

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Monday, February 8, 2010

அசல் - எனது பார்வையில்


நானும் சில மாதங்களாக எந்த பெரிய நடிகர் நடித்த படங்களையும் முதல் வாரத்தில் பார்க்க கூடாது என்று முடிவில் இருந்தேன். நாம் நினைப்தெல்லாம் எங்கே நடக்கிறது. சில பதிவர்களின் விமர்சனத்தை 'அசல்' என்று நம்பி (உனக்கு எங்கடா போச்சு புத்தினு யாரும் கேக்காதிங்க), தலயை பார்க்க போனேன். போன என்னைய சொல்லணும். சரி அத விடுங்க..அது என் கஷ்டம்.

நாம கதைக்கு வருவோம்...அப்பா அஜித் தன் சொத்துகளை முதல் மனைவியின் மகன்களான சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணாவுக்கு எழுதிவைக்காமல், இரண்டாவது அல்லது சின்ன விட்டின் மகனான அஜித்துக்கு எழுதி வைத்துவிடுகிறார். இதை பொறுக்காத அவர்கள் (சம்பத் மற்றும் ராஜீவ் கிருஷ்ணா) அப்பா அஜித்தை கொன்றுவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து இளைய அஜித்தையும் கொன்றுவிடுகிறார்கள் (ஏன் ஒரு மணி நேரமா??? அப்ப தான்பா இடைவேளை விடமுடியும்). பின் பாதியில் மீண்டும் அஜித் உயிருடன் வந்தாரா வில்லன்களை (தன் தம்பிகளை) பலி வாங்கினாரா என்பதை படம் பார்த்து (முடிந்தால்) தெரிந்து கொள்ள(ல்ல)வும்.

கதை சொல்லியாச்சு...இப்ப அதுல நடிச்சவங்களை பத்தி பார்ப்போம்.

கதையின் நாயகன் அஜித். டைட்டிலில் அல்டிமேட் ஸ்டார் எல்லாம் போட்டு கொள்ளவில்லை. நடிக்க பெரிய வாய்ப்பு இல்லை. நடக்கிறார் நடக்கிறார் நடந்து கொண்டே இருக்கிறார் (வைகோவே தோற்று விடுவார் போல). முடியலைடா சாமி...இன்னும் எத்தனை காலம்தான் பில்லா மாதிரியே அவர் நடப்பார் என்று தெரியவில்லை. ஏற்கனவே படம் ஊர்ந்து கொண்டு இருக்கிறது. இதில் இவர் இன்னும் மெதுவாக நடந்து கொண்டு இருக்கிறார். முக பாவனைகள் காட்டவும் வாய்ப்பு இல்லை, காரணம் கூலர்ஸ். இரவு பகல் பாராமல் அணிந்து கொண்டு இருக்கிறார். வேற என்னத்த சொல்ல.


இரு நாயகிகள் - சமிரா மற்றும் பாவனா. இருவரும் அஜித்தை ஒரு 'தல'யாக காதலிக்கிறார்கள். இருவருக்கும் தனித்தனியாக இரு பாடல்கள் வேறு. கடைசியில் ஒருவர் அஜித் கைப்பிடிக்கிறார். மற்றபடி சொல்லிகொள்ளும் படி ஒன்றும் இல்லை.

இப்போ வில்லன்கள் பற்றி...சம்பத், ராஜீவ்கிருஷ்ணா, பிரதீப் ராவத், சுரேஷ் (பழைய ஹீரோ) மற்றும் கெல்லி. இதில் முதல் நால்வரும் காமெடி பீஸ்கள். பேசி கொண்டே இருக்கிறார்கள். அதிலும் அந்த சுரேஷ் மூச்சுக்கு முண்ணுறு தடவை நான் பிரெஞ்சு போலீஸ், நான் பிரெஞ்சு போலீஸ் என்று கத்தி கொண்டே இருக்கிறார். நமக்கு தான் எரிச்சலாக இருக்கிறது. கடைசியில் அவரும் நல்லவராக மாறிவிடுகிறார்.

சீரியஸ் காட்சிகளே காமெடியாக தான் இருக்கிறது. இதில் யூகிசேது வேறு. சில இடங்களில் ஓகே. பல இடங்களில் கொட்டாவி தான் வருகிறது. படத்தின் தயாரிப்பாளர் பிரபுவும் நடித்து இருக்கிறார்.

கதை, திரைக்கதை மற்றும் வசனத்தை அஜித்,சரண் மற்றும் யூகிசேது எழுதி இருக்கிறார்கள். மூன்று பேர் இருந்தும் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார்கள். ஒரு passenger train போலவே மெதுவாக போகிறது. ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது. ஒருவேளை இந்த படத்தை இந்தியாவில் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று தெரியவில்லை. இந்த படத்தை ஏன் வெளிநாட்டில் எடுத்தார்கள் என்றும் புரியவில்லை.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் சரண். சொல்வதற்கு ஒன்றும் இல்லை. பெரிய ஸ்டார், நல்ல தயாரிப்பாளர் கிடைத்தும் இவர் கவுத்து விட்டார்.

Asal @ your own Risk

ஒரு சந்தேகம்: அது என்னமோ தெரியவில்லை மாயாஜாலில் எந்த படம் பார்த்தாலும் மக்கள் ஒரே Reaction தான் கொடுக்கிறார்கள். ஒரு விசில் கிடையாது ஒரு கமெண்ட் கிடையாது. ரொம்ப டிசன்டா இருப்பாய்ங்களோ??

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒரு குட்டிட்ரைலரில் சொதப்பியவர்கள் எங்கே படத்தையும் சொதப்பியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், நல்ல வேளை தெலுங்கு ஆர்யாவை அப்படியே எடுத்துத்திருக்கிறார்கள் (கொஞ்சம் லேட்டாக, நம்ம ரீமேக் ராஜாவாக இருந்தால் (அதாங்க ஜெயம் ரவியின் அண்ணன்) அப்பொழுதே ரீமேக்கிருப்பார்).

ஸ்ரேயா ஒரு கல்லூரி மாணவி. சமீர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு அரசியல்வாதியின் மகன். ஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி (தற்கொலை செய்து கொள்வதாக) காதலிக்க வைக்கிறார். அப்பொழுதுதான் நம் ஹீரோ என்ட்ரியாகிறார். அவரும் ஸ்ரேயாவை காதலிப்பதாக சொல்ல அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை. ஸ்ரேயா தனுஷ் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் தனுஷ் விடாமல் அவரையே காதலிக்கிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே மீதி கதை (ஹீரோவை தவிர வேறு யார்!!!!).

இந்த படத்தை தெலுங்கு ஆர்யா வந்தவுடனே ரீமேக் ஆக்கி இருக்கவேண்டும். ஏன்றென்றால் பல காட்சிகள் மிக சரியாக யுகிக்கமுடிகிறது, இல்லையென்றால் எங்கோ பார்த்த (தமிழ் படத்தில் தான்) மாதிரியே இருக்கிறது. ஆனால் அதையும் மீறி இந்த படத்தை பார்க்க முடிகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் தனுஷ். இந்த மாதிரி கேரக்டர்களுக்கு தனுஷ் ரொம்ப எளிமையாக செட் ஆகிவிடுகிறார். இந்த படத்தில் அவர் செய்யும் சேட்டைகளும் (காதலக்காக) நம்மை ரசிக்க வைக்கின்றன.

ஸ்ரேயாவை சுற்றியே கதை என்பதால் அவரும் ஒரு அளவு நடித்திருக்கிறார்.

முதல் பாதி முழுவதும் ஒளிப்பதிவுக்கு (பாலசுப்ரமணியம்) அந்த அளவுக்கு வேலையில்லை. ஆனால் பிற்பாதியில் மனிதர் கலக்கி இருக்கிறார். இசை DSP. ஆர்யாவில் போட்டதையே இங்கேயும் போட்டு இருக்கிறார்.

மற்றபடி தனுஷ்க்காக குட்டியை கண்டிப்பாக பார்க்கலாம்.

#####################################################################

ஏற்கனவே ஆயிரம் பேர் எழுதி தள்ளிய இந்த படத்தை நானும் ஆயிரத்தில் ஒருவனாக எழுதிக் கொள்கிறேன்.ட்ரைலரில் மிரட்டியவர்கள் இங்கே இரண்டாம் பாதி (சில காட்சிகள் ஏன் வருகிறது என்று புரியவே இல்லை) படத்தை சொதப்பியிருக்கிறார்கள். இங்கே நான் கதையை கூற போவதில்லை. ஏற்கனவே மற்ற பதிவர்கள் நிறைய எழுதி விட்டதால், எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிவர் மூவர் - ரீமா சென் (அந்த அதிரடியான முற்பாதி பிற்பாதி கேரக்டர்க்கு), இசையமைப்பாளர் GV பிரகாஷ் (பாடல்கள் ஏற்கனவே ஹிட், அதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, பின்னணி இசையும் ஓகே, எது தேவையோ அதை தந்து இருக்கிறார்) மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி (முதல் பாதிக்கு மட்டும், இரண்டாம் பாதி கண்கள் கட்டுகிறது).

மற்றபடி கார்த்திக்கு முதல் பாதி (கொஞ்சம் நடிப்பதற்கு) மட்டுமே வேலை, அதுவும் எல்லாரிடமும் அடி வாங்குகிறார். ஆண்ட்ரியாவுக்கு அந்த வேலை கூட இல்லை. நடக்கிறார், இரண்டு பாடலுக்கு நடனம் ஆடுகிறார், அவ்வளவுதான். பிற்பாதியில் அதுவும் கிடையாது.

செல்வராகவன் தெரிவதெல்லாம் Adult's Only காட்சிக்களில் மட்டுமே. பேப்பரில் எழுதியதெல்லாம் ஸ்க்ரீனில் வந்ததா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மற்றபடி அசத்தலான முதல் பாதி, சொதப்பலான இரண்டாம் பாதி.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Tuesday, January 5, 2010

அசல் - பாடல்கள் என் பார்வையில்அஜித்தின் அடுத்த படம் ரெடி. பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. Field out ஆன பரத்வாஜ், சமிபத்தில் ஹிட் கொடுக்காத சரண் மற்றும் அஜித் இனைந்திருக்கும் படம். பழைய வெற்றி கூட்டணி. ஆதனால் பாடல்களை கேட்க ஆர்வமாக இருந்தேன்.

இதோ உங்களுக்காக அசலான பாடல்கள் என் பார்வையில்.

1. அசல் - Sunitha Menon

காற்றை கிழித்து கேளு என்று இதன் பல்லவி தொடங்குகிறது. கேட்கும் பொழுது கேப்டன் நடித்த அலெக்சாண்டர் பட டைட்டில் பாடல் நினைவுக்கு வந்தது. இந்த பாடலை கேட்கும் பொழுது இதுவும் டைட்டில் பாடலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அஜித்தும் வழக்கம் போல் நடந்து (டான்ஸ் ஆடிட்டாலும்) தான் வருவார் போல. சில வரிகள் கிழே:

காற்றில் ஏறியும் வருவான்
கட்டாந் தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்!

2. குதிரைக்கு தெரியும் - Surmukhi, Sree Charan

காதல் பாடல் போன்று இருக்கின்றது. அதுவும் காதலியின் ஒன் சைடு காதல் போல. சூர்முகியின் குரல் கேட்க நன்றாக இருக்கின்றது. ஆனால் இசை தான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. சில வரிகள் கிழே:

இளமைக்குள்ளே இறங்கிவிடு
இதயத்திலே புதையல் எடு
உடல் நதியில் குளித்து விடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு3. டொட்டொடய்ங் - Mukesh, Janani

காதல் பாடல். Where is the party புகழ் முகேஷ் பாடியிருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மற்றோரு பாடல், அவ்வளவே.

4. எங்கே எங்கே - SPB

வாழ்கையில் (படத்தில் மட்டும்) தன்னை ஏமாற்றியவர்களை நினைத்து பாடும் பாடல் போல தெரிகிறது. ஆரம்ப இசை கேட்க நன்றாக இருக்கிறது (Saxphone என்று நினைக்கிறேன்). SPB ஆக்ரோஷமாக பாடியிருக்கிறார். ஒரு இடத்தில் 'நான் கடவுள்' என்ற வரியை அழுத்தி High pitchல் பாடியிருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. தல - க்கு மட்டுமே வெளிச்சம்.

5. துஷ்யந்தா - Surmukhi, Kumaran

எனக்கு Pick of the Album போல் தெரிகிறது. சூர்முகியின் குரல் ஈர்க்கிறது. சிறிது காலம் முன்பு பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தார்கள். சர்வத்தில் சில வரிகளை மட்டும் (சுட்ட சூரியனே பாடலில்) உபயோகித்திருந்தார்கள். இந்த பாடலில் கண்ணதாசனுக்கும், M.S. விஸ்வநாதனுக்கும் ஒரு நன்றியை சொல்லிவிட்டு 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலில் இருந்து நான்கு வரியை உபயோகித்து உள்ளார்கள்.

6. எம் தந்தை - Bharadwaj

தந்தையை நினைவு கூறும் பாடல். கொஞ்சம் மெதுவாகவே வருகிறது.

7. எங்கே எங்கே - Karthikeyan & Chorus

நான்காவது பாடல் இங்கே சோகமாக ஒலிக்கிறது.

My Choice in order : 5 (Good), 1(Average) and 2 (Average)

எனக்கு தெரிந்து சமிபத்தில் அஜித் நடந்த...ச்சே....நடித்த படத்தின் பாடல்கள் படம் வந்த பிறகே ஹிட் ஆகி இருக்கிறது (அதுவும் படம் ஹிட் ஆனால் மட்டும்). இதுவும் அப்படி தான் போலிருக்கிறது.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

படங்கள் நன்றி: Indiaglitz.com

Monday, January 4, 2010

சென்னை புத்தகக்காட்சிபுத்தாண்டுயன்று கோவிலுக்கு செல்வதை தவிர நான் வேறு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்த வருடம் கோவிலுக்கும் செல்லவில்லை, ஏனென்று எனக்கும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது 33வது புத்தகக்காட்சி சென்னையில் 30ம் தேதி தொடங்குவதாக எங்கோ பார்த்த ஞாபகம். சரி அதற்கு செல்லலாம் என்று முடிவு செய்து நண்பரை தொடர்பு கொண்ட பொழுது அவரும் வருவதாக கூறினார்.

ஒவ்வொரு வருடமும் நானும் சென்னை புத்தகக்காட்சிக்கு செல்லவேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் பொங்கல் விடுமுறையையொட்டி பத்து நாட்கள் ஊருக்கு சென்று விடுவதால், என்னால் புத்தகக்காட்சிக்கு செல்ல முடிந்ததில்லை. ஆனால் இந்த வருடம் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அது நடந்து விட்டது. (எப்பொழுதும் பொங்கல் விடுமுறையையொட்டி நடக்கும் புத்தகக்காட்சி இவ்வருடம் முன்னமே ஆரம்பித்து (பொங்கலுக்கு முன்னே) முடிந்து விடுகிறது, ஏனென்று தெரியவில்லை (யாராவது தெரிந்தால் கூறவும்)).படங்கள் - நன்றி: சங்கர் மற்றும் ஜெட்லி

5.30 மணி போல் நாங்கள் புத்தகக்காட்சி நடக்கும் திடலுக்கு சென்று விட்டோம். பைக் பார்க்கிங் கட்டணம் என்று எதுவும் எங்களிடம் வசூலிக்க வில்லை. ஆனால் ஜெட்லியிடம் 15 ரூபாய் வாங்கியதாக தகவல். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற பொழுது மேடையில் வைகோ உரையாடி கொண்டிருந்தார். நுழைவு சீட்டு வாங்குவதற்கு என்று அங்கு ஒரு ஐந்து ஆறு கவுன்டர் இருந்தது. ஆனால் எந்த கவுன்டர் சென்றாலும் பக்கத்து கவுன்டர் சென்று வாங்கி கொள்ள சொன்னார்கள். அங்கு சென்றால் அங்கேயும் அதே கதை. ஒருவழியாக கடைசி கவுன்டரில் நுழைவு சீட்டு வாங்கி கொண்டு அரங்கினுள் சென்றோம்.

முதல் முறை என்பதால் எனக்கு இன்ன புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று ஒரு திட்டமும் இல்லை, தவிர பாடபுத்தகங்கள் மட்டுமே நான் இதுவரை (எனக்கு) வாங்கி இருக்கிறேன் (ஹி ஹி ஹி). மற்றபடி இன்ன இன்ன எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் என்ன எழுதுவார்கள், எதை பற்றி எழுதுவார்கள் என்று ஒரு ஐடியாவும் கிடையாது. அதனால் எனக்கு தெரிந்த சில புத்தகங்கள் மட்டும் வாங்கிகொண்டு வந்தேன்.

சில சுவாரசிய நிகழ்வுகள்:

1 . நண்பர் ஒரு ஸ்டாலில் (பெயர் மறந்துவிட்டது) ஆங்கில புத்தகம் ஒன்றை வாங்கினார். விலை 275 ரூபாய். நண்பர் மூன்று நூறு ரூபாய் தாள்களை கொடுத்தார். பில் போடுப்பவர் மீதி 25 ரூபாய் கொடுப்பர் என்று கையை நீட்டினால் அவர் மீதி 325 ரூபாயை திணித்தார். நாங்கள் ஐண்ணூறு ரூபாய் கொடுத்தோம் என்று நினைத்திருப்பார் போல. நண்பர் தான் முன்ணூறு ரூபாய் கொடுத்ததாக அவருக்கு நினைவுபடுத்தி மீதியை அவரிடமே திருப்பி கொடுத்தார். பில் போடுபவர் இது போல் எத்தனை பேரிடம் தவறுதலாக பணத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை :-(

2 .மற்ற ஸ்டால்களில் விட கிழக்கு பதிப்பகத்தில் நல்ல கூட்டம், ஏன்னென்று தெரியவில்லை. நானும் இருப்புத்தகத்தை வாங்கி கொண்டு பில் போட சென்றேன். பில் போடுபவர் ஒரு புத்தகத்தை பார்த்து நீங்கள் (அதாவது நான்) தான் இதை முதலில் வாங்குவதாக கூறினார் (நான் சென்றது மூன்றாவது நாளில்). அது கேப்டனை பற்றி யுவகிருஷ்னா (லக்கிலுக்) எழுதிய புத்தகம். நான் அவரிடம் கேப்டனுக்காக வாங்கவில்லை 'லக்கி'க்காக வாங்குவதாக சொல்லிவிட்டு வந்தேன். எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்த புத்தகத்தை மூன்றாம் நாளில் நான் முதலாவதாக வாங்குவதாக கூறினார அல்லது மூன்று நாட்களுக்கும் சேர்த்து நான் தான் முதல் போனியா (ஆஆஆவ்வ்வ்வ்).

3. எல்லோரும் சாரு (கூடவே மனுஷ்யபுத்திரன்) எழுதிய புத்தகத்தை வாங்கிவிட்டு அவரிடம் (சாருவிடம்) ஒரு கையெழுத்து வாங்கி சென்றார்கள். நானும் வாங்கினேன் அவர் கையெழுத்துயை அல்ல, அவர் எழுதிய புத்தகத்தை மட்டும்.

4. சாருவிடம் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவரை எங்கோ பார்த்த மாதிரி (புகைப்படத்தில் தான்) இருந்தது. சற்றென்று ஞாபகம் வரவில்லை, அவர் சென்ற பிறகு தான் நினைவுக்கு வந்தது, அவர் டாக்டர் ப்ருனோ என்று. ப்ருனோ சென்ற பொழுது கூடவே ஒருவரும் சென்றார். அவர் வேறு யாரும் அல்ல, பதிவர் லக்கிலுக் தான்.

ஒரு பிரத்யேகமான தகவல்:

ஜக்குபாய் படம் நெட்டில் உலாவி கொண்டிருக்கிறது. எடிட்டிங்கில் இருந்த படத்தை நெட்டில் உலாவ விட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் பின்னணி இசையே இல்லை.