Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒரு குட்டி



ட்ரைலரில் சொதப்பியவர்கள் எங்கே படத்தையும் சொதப்பியிருப்பார்கள் என்று நினைத்திருந்தேன், நல்ல வேளை தெலுங்கு ஆர்யாவை அப்படியே எடுத்துத்திருக்கிறார்கள் (கொஞ்சம் லேட்டாக, நம்ம ரீமேக் ராஜாவாக இருந்தால் (அதாங்க ஜெயம் ரவியின் அண்ணன்) அப்பொழுதே ரீமேக்கிருப்பார்).

ஸ்ரேயா ஒரு கல்லூரி மாணவி. சமீர் அதே கல்லூரியில் படிக்கும் ஒரு அரசியல்வாதியின் மகன். ஸ்ரேயாவை கட்டாயப்படுத்தி (தற்கொலை செய்து கொள்வதாக) காதலிக்க வைக்கிறார். அப்பொழுதுதான் நம் ஹீரோ என்ட்ரியாகிறார். அவரும் ஸ்ரேயாவை காதலிப்பதாக சொல்ல அங்கே ஆரம்பிக்கிறது பிரச்சனை. ஸ்ரேயா தனுஷ் காதலை ஏற்க மறுக்கிறார். ஆனால் தனுஷ் விடாமல் அவரையே காதலிக்கிறார். இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே மீதி கதை (ஹீரோவை தவிர வேறு யார்!!!!).

இந்த படத்தை தெலுங்கு ஆர்யா வந்தவுடனே ரீமேக் ஆக்கி இருக்கவேண்டும். ஏன்றென்றால் பல காட்சிகள் மிக சரியாக யுகிக்கமுடிகிறது, இல்லையென்றால் எங்கோ பார்த்த (தமிழ் படத்தில் தான்) மாதிரியே இருக்கிறது. ஆனால் அதையும் மீறி இந்த படத்தை பார்க்க முடிகிறது என்றால் அதற்கு ஒரே காரணம் தனுஷ். இந்த மாதிரி கேரக்டர்களுக்கு தனுஷ் ரொம்ப எளிமையாக செட் ஆகிவிடுகிறார். இந்த படத்தில் அவர் செய்யும் சேட்டைகளும் (காதலக்காக) நம்மை ரசிக்க வைக்கின்றன.

ஸ்ரேயாவை சுற்றியே கதை என்பதால் அவரும் ஒரு அளவு நடித்திருக்கிறார்.

முதல் பாதி முழுவதும் ஒளிப்பதிவுக்கு (பாலசுப்ரமணியம்) அந்த அளவுக்கு வேலையில்லை. ஆனால் பிற்பாதியில் மனிதர் கலக்கி இருக்கிறார். இசை DSP. ஆர்யாவில் போட்டதையே இங்கேயும் போட்டு இருக்கிறார்.

மற்றபடி தனுஷ்க்காக குட்டியை கண்டிப்பாக பார்க்கலாம்.

#####################################################################

ஏற்கனவே ஆயிரம் பேர் எழுதி தள்ளிய இந்த படத்தை நானும் ஆயிரத்தில் ஒருவனாக எழுதிக் கொள்கிறேன்.



ட்ரைலரில் மிரட்டியவர்கள் இங்கே இரண்டாம் பாதி (சில காட்சிகள் ஏன் வருகிறது என்று புரியவே இல்லை) படத்தை சொதப்பியிருக்கிறார்கள். இங்கே நான் கதையை கூற போவதில்லை. ஏற்கனவே மற்ற பதிவர்கள் நிறைய எழுதி விட்டதால், எனக்கு பிடித்த சில விஷயங்கள் மட்டுமே பகிர்ந்து கொள்கிறேன்.

படத்தில் பாராட்டப்பட வேண்டிவர் மூவர் - ரீமா சென் (அந்த அதிரடியான முற்பாதி பிற்பாதி கேரக்டர்க்கு), இசையமைப்பாளர் GV பிரகாஷ் (பாடல்கள் ஏற்கனவே ஹிட், அதை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை, பின்னணி இசையும் ஓகே, எது தேவையோ அதை தந்து இருக்கிறார்) மற்றும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி (முதல் பாதிக்கு மட்டும், இரண்டாம் பாதி கண்கள் கட்டுகிறது).

மற்றபடி கார்த்திக்கு முதல் பாதி (கொஞ்சம் நடிப்பதற்கு) மட்டுமே வேலை, அதுவும் எல்லாரிடமும் அடி வாங்குகிறார். ஆண்ட்ரியாவுக்கு அந்த வேலை கூட இல்லை. நடக்கிறார், இரண்டு பாடலுக்கு நடனம் ஆடுகிறார், அவ்வளவுதான். பிற்பாதியில் அதுவும் கிடையாது.

செல்வராகவன் தெரிவதெல்லாம் Adult's Only காட்சிக்களில் மட்டுமே. பேப்பரில் எழுதியதெல்லாம் ஸ்க்ரீனில் வந்ததா என்று அவரிடம் தான் கேட்க வேண்டும்.

மற்றபடி அசத்தலான முதல் பாதி, சொதப்பலான இரண்டாம் பாதி.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

Tuesday, January 5, 2010

அசல் - பாடல்கள் என் பார்வையில்



அஜித்தின் அடுத்த படம் ரெடி. பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டது. Field out ஆன பரத்வாஜ், சமிபத்தில் ஹிட் கொடுக்காத சரண் மற்றும் அஜித் இனைந்திருக்கும் படம். பழைய வெற்றி கூட்டணி. ஆதனால் பாடல்களை கேட்க ஆர்வமாக இருந்தேன்.

இதோ உங்களுக்காக அசலான பாடல்கள் என் பார்வையில்.

1. அசல் - Sunitha Menon

காற்றை கிழித்து கேளு என்று இதன் பல்லவி தொடங்குகிறது. கேட்கும் பொழுது கேப்டன் நடித்த அலெக்சாண்டர் பட டைட்டில் பாடல் நினைவுக்கு வந்தது. இந்த பாடலை கேட்கும் பொழுது இதுவும் டைட்டில் பாடலாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. அஜித்தும் வழக்கம் போல் நடந்து (டான்ஸ் ஆடிட்டாலும்) தான் வருவார் போல. சில வரிகள் கிழே:

காற்றில் ஏறியும் வருவான்
கட்டாந் தரையிலும் படுப்பான்
எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான்
எமனுக்கு டீ கொடுப்பான்!

2. குதிரைக்கு தெரியும் - Surmukhi, Sree Charan

காதல் பாடல் போன்று இருக்கின்றது. அதுவும் காதலியின் ஒன் சைடு காதல் போல. சூர்முகியின் குரல் கேட்க நன்றாக இருக்கின்றது. ஆனால் இசை தான் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கிறது. சில வரிகள் கிழே:

இளமைக்குள்ளே இறங்கிவிடு
இதயத்திலே புதையல் எடு
உடல் நதியில் குளித்து விடு
உயிருக்குள்ளே உறங்கிவிடு



3. டொட்டொடய்ங் - Mukesh, Janani

காதல் பாடல். Where is the party புகழ் முகேஷ் பாடியிருக்கிறார். மற்றபடி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. மற்றோரு பாடல், அவ்வளவே.

4. எங்கே எங்கே - SPB

வாழ்கையில் (படத்தில் மட்டும்) தன்னை ஏமாற்றியவர்களை நினைத்து பாடும் பாடல் போல தெரிகிறது. ஆரம்ப இசை கேட்க நன்றாக இருக்கிறது (Saxphone என்று நினைக்கிறேன்). SPB ஆக்ரோஷமாக பாடியிருக்கிறார். ஒரு இடத்தில் 'நான் கடவுள்' என்ற வரியை அழுத்தி High pitchல் பாடியிருக்கிறார். ஏன் என்று தெரியவில்லை. தல - க்கு மட்டுமே வெளிச்சம்.

5. துஷ்யந்தா - Surmukhi, Kumaran

எனக்கு Pick of the Album போல் தெரிகிறது. சூர்முகியின் குரல் ஈர்க்கிறது. சிறிது காலம் முன்பு பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்தார்கள். சர்வத்தில் சில வரிகளை மட்டும் (சுட்ட சூரியனே பாடலில்) உபயோகித்திருந்தார்கள். இந்த பாடலில் கண்ணதாசனுக்கும், M.S. விஸ்வநாதனுக்கும் ஒரு நன்றியை சொல்லிவிட்டு 'பார்த்த ஞாபகம் இல்லையோ' என்ற பாடலில் இருந்து நான்கு வரியை உபயோகித்து உள்ளார்கள்.

6. எம் தந்தை - Bharadwaj

தந்தையை நினைவு கூறும் பாடல். கொஞ்சம் மெதுவாகவே வருகிறது.

7. எங்கே எங்கே - Karthikeyan & Chorus

நான்காவது பாடல் இங்கே சோகமாக ஒலிக்கிறது.

My Choice in order : 5 (Good), 1(Average) and 2 (Average)

எனக்கு தெரிந்து சமிபத்தில் அஜித் நடந்த...ச்சே....நடித்த படத்தின் பாடல்கள் படம் வந்த பிறகே ஹிட் ஆகி இருக்கிறது (அதுவும் படம் ஹிட் ஆனால் மட்டும்). இதுவும் அப்படி தான் போலிருக்கிறது.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

படங்கள் நன்றி: Indiaglitz.com

Monday, January 4, 2010

சென்னை புத்தகக்காட்சி



புத்தாண்டுயன்று கோவிலுக்கு செல்வதை தவிர நான் வேறு ஒன்றும் செய்வதில்லை. ஆனால் இந்த வருடம் கோவிலுக்கும் செல்லவில்லை, ஏனென்று எனக்கும் தெரியவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் போது 33வது புத்தகக்காட்சி சென்னையில் 30ம் தேதி தொடங்குவதாக எங்கோ பார்த்த ஞாபகம். சரி அதற்கு செல்லலாம் என்று முடிவு செய்து நண்பரை தொடர்பு கொண்ட பொழுது அவரும் வருவதாக கூறினார்.

ஒவ்வொரு வருடமும் நானும் சென்னை புத்தகக்காட்சிக்கு செல்லவேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் பொங்கல் விடுமுறையையொட்டி பத்து நாட்கள் ஊருக்கு சென்று விடுவதால், என்னால் புத்தகக்காட்சிக்கு செல்ல முடிந்ததில்லை. ஆனால் இந்த வருடம் எப்படியாவது சென்று விட வேண்டும் என்று நினைத்திருந்தேன், அது நடந்து விட்டது. (எப்பொழுதும் பொங்கல் விடுமுறையையொட்டி நடக்கும் புத்தகக்காட்சி இவ்வருடம் முன்னமே ஆரம்பித்து (பொங்கலுக்கு முன்னே) முடிந்து விடுகிறது, ஏனென்று தெரியவில்லை (யாராவது தெரிந்தால் கூறவும்)).



படங்கள் - நன்றி: சங்கர் மற்றும் ஜெட்லி

5.30 மணி போல் நாங்கள் புத்தகக்காட்சி நடக்கும் திடலுக்கு சென்று விட்டோம். பைக் பார்க்கிங் கட்டணம் என்று எதுவும் எங்களிடம் வசூலிக்க வில்லை. ஆனால் ஜெட்லியிடம் 15 ரூபாய் வாங்கியதாக தகவல். பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்ற பொழுது மேடையில் வைகோ உரையாடி கொண்டிருந்தார். நுழைவு சீட்டு வாங்குவதற்கு என்று அங்கு ஒரு ஐந்து ஆறு கவுன்டர் இருந்தது. ஆனால் எந்த கவுன்டர் சென்றாலும் பக்கத்து கவுன்டர் சென்று வாங்கி கொள்ள சொன்னார்கள். அங்கு சென்றால் அங்கேயும் அதே கதை. ஒருவழியாக கடைசி கவுன்டரில் நுழைவு சீட்டு வாங்கி கொண்டு அரங்கினுள் சென்றோம்.

முதல் முறை என்பதால் எனக்கு இன்ன புத்தகம் தான் வாங்க வேண்டும் என்று ஒரு திட்டமும் இல்லை, தவிர பாடபுத்தகங்கள் மட்டுமே நான் இதுவரை (எனக்கு) வாங்கி இருக்கிறேன் (ஹி ஹி ஹி). மற்றபடி இன்ன இன்ன எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். ஆனால் அவர்கள் என்ன எழுதுவார்கள், எதை பற்றி எழுதுவார்கள் என்று ஒரு ஐடியாவும் கிடையாது. அதனால் எனக்கு தெரிந்த சில புத்தகங்கள் மட்டும் வாங்கிகொண்டு வந்தேன்.

சில சுவாரசிய நிகழ்வுகள்:

1 . நண்பர் ஒரு ஸ்டாலில் (பெயர் மறந்துவிட்டது) ஆங்கில புத்தகம் ஒன்றை வாங்கினார். விலை 275 ரூபாய். நண்பர் மூன்று நூறு ரூபாய் தாள்களை கொடுத்தார். பில் போடுப்பவர் மீதி 25 ரூபாய் கொடுப்பர் என்று கையை நீட்டினால் அவர் மீதி 325 ரூபாயை திணித்தார். நாங்கள் ஐண்ணூறு ரூபாய் கொடுத்தோம் என்று நினைத்திருப்பார் போல. நண்பர் தான் முன்ணூறு ரூபாய் கொடுத்ததாக அவருக்கு நினைவுபடுத்தி மீதியை அவரிடமே திருப்பி கொடுத்தார். பில் போடுபவர் இது போல் எத்தனை பேரிடம் தவறுதலாக பணத்தை கொடுத்தார் என்று தெரியவில்லை :-(

2 .மற்ற ஸ்டால்களில் விட கிழக்கு பதிப்பகத்தில் நல்ல கூட்டம், ஏன்னென்று தெரியவில்லை. நானும் இருப்புத்தகத்தை வாங்கி கொண்டு பில் போட சென்றேன். பில் போடுபவர் ஒரு புத்தகத்தை பார்த்து நீங்கள் (அதாவது நான்) தான் இதை முதலில் வாங்குவதாக கூறினார் (நான் சென்றது மூன்றாவது நாளில்). அது கேப்டனை பற்றி யுவகிருஷ்னா (லக்கிலுக்) எழுதிய புத்தகம். நான் அவரிடம் கேப்டனுக்காக வாங்கவில்லை 'லக்கி'க்காக வாங்குவதாக சொல்லிவிட்டு வந்தேன். எனக்கு என்ன சந்தேகம் என்றால் இந்த புத்தகத்தை மூன்றாம் நாளில் நான் முதலாவதாக வாங்குவதாக கூறினார அல்லது மூன்று நாட்களுக்கும் சேர்த்து நான் தான் முதல் போனியா (ஆஆஆவ்வ்வ்வ்).

3. எல்லோரும் சாரு (கூடவே மனுஷ்யபுத்திரன்) எழுதிய புத்தகத்தை வாங்கிவிட்டு அவரிடம் (சாருவிடம்) ஒரு கையெழுத்து வாங்கி சென்றார்கள். நானும் வாங்கினேன் அவர் கையெழுத்துயை அல்ல, அவர் எழுதிய புத்தகத்தை மட்டும்.

4. சாருவிடம் ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவரை எங்கோ பார்த்த மாதிரி (புகைப்படத்தில் தான்) இருந்தது. சற்றென்று ஞாபகம் வரவில்லை, அவர் சென்ற பிறகு தான் நினைவுக்கு வந்தது, அவர் டாக்டர் ப்ருனோ என்று. ப்ருனோ சென்ற பொழுது கூடவே ஒருவரும் சென்றார். அவர் வேறு யாரும் அல்ல, பதிவர் லக்கிலுக் தான்.

ஒரு பிரத்யேகமான தகவல்:

ஜக்குபாய் படம் நெட்டில் உலாவி கொண்டிருக்கிறது. எடிட்டிங்கில் இருந்த படத்தை நெட்டில் உலாவ விட்டு இருப்பார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் பின்னணி இசையே இல்லை.