Wednesday, April 28, 2010

சுறா - திருந்தாத விஜய் (நன்றி: கார்க்கி)

இருந்தாலும் இந்த காசி தியேட்டர்க்காரர்களுக்கு இந்த குசும்பு இருக்க கூடாது. படம் ஆரம்பிக்கும் பொழுது ஒரு ஸ்லைடு போட்டார்கள் பாருங்கள், என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் இப்படி இருந்தது 'இந்த திரைப்படம் சாட்டிலைட் மூலம் திரையிடுவதால் ஒன்ஸ்மோர் போட இயலாது'. சிரிப்பு வருமா வராதா.


சரி நாம் சுறா வுக்கு வருவோம். விஜய்-யின் ஐம்பதாவது படம். அது ஒன்று மட்டுமே இப்படத்தை முதல் நாள் பார்க்க தூண்டியது. சரி இந்த படத்திலாவது ஏதாவது வித்தியாசமாக செய்திருப்பார் என்று போனால், ஐம்பது படம் அல்ல நூறு படம் நடித்தாலும் பெரிய வித்தியாசம் இருக்க போவதில்லை (நடிப்பில் மற்றும் திரைக்கதையில்).

சமீபத்தில் வந்த படங்களில் அனைத்து காட்சிகளும் யூகிக்க முடிந்த படம் என்றால் அது சுறா வாக தான் இருக்கும் (அவர் அறிமுக காட்சி தவிர). எப்படி தான் இப்படி உக்காந்து யோசிப்பாங்களோ...தெரியல....

விஜய் வழக்கம் போல நம்மை பார்த்து வசனம் பேசுகிறார் (சம்மந்தம் இல்லாமல்), காமெடி பண்ணுகிறார், பாடுகிறார், சண்டை போடுகிறார். கடலுக்கு எப்படி எல்லை இல்லையோ, அதுபோல் வருவோர் போவோர் எல்லாம் எல்லையில்லாமல் விஜய் புராணம் பாடுகிறார்கள். நமக்குதான் காதில் ரத்தம் வருகிறது.

தமன்னா ஒரு லூசு பெண் போலவே வருகிறார் (அட அந்த கேரக்டர் சொன்னேன்). இரண்டாவது முறை விஜயை பார்க்கும் பொழுது காதல் கொள்கிறார். அதன் பின் அவர் எப்பொழுதெல்லாம் வருகிறாரோ அப்பொழுதெல்லாம் பின்னாடியே ஒரு பாடலும் வருகிறது. ஆனால் ரசிகர்கள் தான் வெளியே போய் விடுகிறார்கள், தம் அடிக்க.

வில்லன் தேவ்கில். இவ்வளவு காமெடியான டப்பிங் வில்லனை பார்க்கவே சிரிப்பாக இருக்கிறது. படம் முழுதும் விஜயை அழிக்க திட்டம் போட்டு கொண்டே இருக்கிறார். நமக்கு தான் முன்னாடியே தெரிந்து விடுகிறது. நமக்கே தெரியும் பொழுது, ஹீரோவுக்கு தெரியாத என்ன.

வடிவேலு - சில இடங்களில் சிரிப்பு, பல இடங்களில் எரிச்சல்.

விஜய் படத்தில் பாடல்கள் எல்லாம் படம் வருவதற்கு முன் ஹிட்டாகும். ஆனால் இம்முறை படம் வந்தும் கேட்க முடியவில்லை, இரண்டு பாடல்கள் (தஞ்சாவூர் ஜில்லாகாரி மற்றும் நான் நடந்தால் அதிரடி) தவிர மற்ற பாடல்கள் எல்லாம் படத்தை நேரம் கடத்த தான் உதவுகிறது. அந்த இரு பாடல்களுக்கும் ராபர்ட் தான் நடனம் அமைத்திருக்கிறார். அட்டகாசம். தஞ்சாவூர் ஜில்லாகாரி பாடலுக்கு பின் வரும் சண்டைகாட்சி படமாக்கிய விதம் மற்றும் எடிட் பண்ண விதம் , அருமை. அதை போல படம் முழுதும் வெட்டி தள்ளியிருக்கலாம்.

டைரக்டர் ராஜகுமார் பத்தியெல்லாம் சொல்ல விரும்பலப்பா.

மொத்தத்தில் சுறா - வழக்கம் போல் விஜய் ரசிகர்களுக்கு மட்டும்.

குறிப்பு: நான் வேற என்னத்த கேட்க போறேன், பிடிச்சு இருந்த தமிலிஷிலேயும், தமிழ்மணத்திலேயும் குத்துங்க, இல்லைனா பின்னூட்டம் போடுங்க.

16 comments:

  1. மொத்ததில் பாக்க வேணாம்கிறீங்க..

    ReplyDelete
  2. //ok rittu//
    தங்களின் முதல் வருகைக்கு நன்றி ரமேஷ்..

    ReplyDelete
  3. //மொத்ததில் பாக்க வேணாம்கிறீங்க..//
    விஜய் ரசிகராக இருந்தால் கண்டிப்பாக பார்த்து விடவும். இல்லையென்றால் தவிர்ப்பது நலம்...

    ReplyDelete
  4. //Kolipaiyan said...
    same blood.//
    நன்றி Kolipaiyan. விஜய் படம் பார்த்தால் எல்லோருக்கும் same blood தான்...

    ReplyDelete
  5. vijay-kku rasigaraga iruppadhu RITHESSH-kku kuda irukkalam. avar nadicha NAYAGAN kuda edho parava illai. correct thane?

    madhumidha
    madhumidha1@yahoo.com

    ReplyDelete
  6. உண்மையாக நான் வடிவேலுக்காக தான் படம் பார்க்க போனேன்....அப்பாவ் தமன்னா ரொம்ப நல்ல இருக்குறா......

    Hi Arun & views

    It is a new Social site that combines *Facebook, Twitter, Youtube,Myspace, Linked-in and more...All on one page


    It is Free to Join with an Option to Upgrade to Gold Member for$10/Mo. You Earn Residual......

    Join with this link http://Join.YourNight.com/srdhrn

    ReplyDelete
  7. நன்றி sweet @ madhumidha...
    //vijay-kku rasigaraga iruppadhu RITHESSH-kku kuda irukkalam. avar nadicha NAYAGAN kuda edho parava illai. correct thane//
    ஹ ஹ ஹ...இந்த விளையாட்டுக்கு நான் வரலப்பா....

    ReplyDelete
  8. //sridharan said...
    உண்மையாக நான் வடிவேலுக்காக தான் படம் பார்க்க போனேன்....அப்பாவ் தமன்னா ரொம்ப நல்ல இருக்குறா.....//
    தங்கள் வருகைக்கு நன்றி Sridharan

    ReplyDelete
  9. அப்படியா சங்கதி.ஓட்டு போட்டுடுறேன்.

    ReplyDelete
  10. நன்றிக்கு நன்றி அருண்...

    முதல் ஸ்லைடில் என்ன காமெடி? ஒன்ஸ்மோர் கேட்கும்படி ஒரு பாடல் கூட இல்லைன்னு சொல்றீங்களா? நான் நடந்தால் அதிரடி, கிட்டத்தட்ட அனைத்து இடஙக்ளிலும் ஒன்ஸ்மொர் போடப்பட்டது.

    என் பதிவு பார்த்து தலைப்பு வச்ச நீங்க, ப்டத்துக்கு போகாமலும் இருந்திருக்கலாம் :))))

    ஸ்வீட் அவர்களுக்கு,

    posted by madhumidha 21 months ago
    madhumidha1@yahoo.com
    mhmmm i am not enemy of kamal... he is actor that's all... rajini is great entertainer.... childrens and youth like rajini, vijay /

    இது நீங்கள் எழுதிய கமெண்ட். :))

    ReplyDelete
  11. //VISA said...
    அப்படியா சங்கதி.ஓட்டு போட்டுடுறேன்//

    நன்றி விசா

    //தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...
    :)
    //
    தங்களின் முதல் வருகைக்கு நன்றி தமிழன்.

    ReplyDelete
  12. //என் பதிவு பார்த்து தலைப்பு வச்ச நீங்க, ப்டத்துக்கு போகாமலும் இருந்திருக்கலாம்//
    நானே ஒன்னு இரண்டு தான் எழுதுறேன். அதையும் நிப்பாட்டிடுவிங்க போல :-)
    வருகைக்கு மீண்டும் நன்றி கார்க்கி (எத்தன)..

    ReplyDelete
  13. yovv.... unakku vera velaiye illaya.... onnum illadhe visayathe ivlo perusu pannalama... vijay kochikke poraru pa...

    ReplyDelete